டில்லி
கடந்த 2014 முதல் 2023 வரை வங்கிகள் ரூ.14.56 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளாது.
தற்போது நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்த வண்ணம் உள்ளனர். அவ்வகையில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒரு கேள்வியை எழுப்பினார்.
இதற்கு நிதித்துறை இணையமைச்சர் அளித்த பதிலில், ‘ கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வங்கிகளால் ரூ.14,56, 226 லட்சம் கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக 2018-19 ஆம் ஆண்டில் 2.36 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக 2019ஆ-20 ஆம் ஆண்டில் 2.36 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறைந்த பட்சமாக 2014-15 ஆம் வருடம் 58.786 கோடி கடனும் அடுத்தபடியாக 2015-16 ஆம் வருடம் 70.413 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள ரூ. 14.56 லட்சம் கோடியில் ரூ. 7.48 லட்சம் கோடி கடன் பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.