டில்லி,
பொதுமக்களின் சிரமத்தை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் சனி, ஞாயிறு இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.மேலும் வங்கியின் வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு ரூ.500, ரூ.1000 ரூபாய் செல்லாது என நேற்று அறிவித்ததை தொடர்ந்து,  அனைத்து வங்கிகளும் இன்று விடுமுறை விடப்பட்டது.  அதேபோல் அனைத்து ஏடிஎம்களும் இயல் இழந்தன.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.  தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்களை கொண்டு எந்த பொருட்களும் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
reserve
பொதுவாகவே வங்கி ஊழியர்கள், ஏழை மக்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் நாளை பொதுமக்களின் கூட்டம் வங்கிகளில் அலைமோதும். எனவே, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் பழைய பணத்தை மாற்றி கொடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் வரும் சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை, அடுத்த நாள் ஞாயிறு வழக்கம்போல் வங்கி விடுமுறை. தொடர்ந்து விடுமுறை வருவதால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும், ஆகவே வரும் டிசம்பர் 30 வரை அனைத்து நாட்களிலும் வங்கிகள் இயங்க அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து,பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்ததாசும், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் முழு நேரம் இயங்கும் என்று டுவிட் செய்துள்ளார்.
சில்லரை பணத்தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை அடுத்து, அனைத்து வங்கிகளும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் முழு நேரம் இயங்க அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். வங்கிகளில் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் முடியும். ஆனால், ஏடிஎம் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை முதலே வேலை செய்யும். அன்று முதலே ஏடிஎம் இயந்திரங்க ளில் பணம் எடுக்க முடியும்.
இதுகுறித்து, இந்தியாவின் மிகப்பெரிய  வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  அறிவித்துள்ளதாவது,
நாளை முதல் வங்கிகள் அனைத்தும் மாலை 6 மணி வரை இயங்கும் என்றும், பணப் பரிவர்த்தனைக்கு தனி கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறியதாவது, ஐசிஐசிஐ-ன் அனைத்து கிளைகளும் வரும் வியாழன் மற்றும் வெள்ளி  இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றார்.
ஆக்சிஸ் வங்கி, இதுகுறித்து ஆக்சிஸ் வங்கி தலைவர் ராஜீவ் ஆனந்த் கூறியதாவது, வங்கியின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், 5 முறை ஏடிஎம்-ல் இலவசமாக பணம் எடுக்கலாம் என்று கூறி உள்ளார்.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வங்கிகளும் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.
அதுபோல பெரும்பாலான வங்கிகளில், பழைய நோட்டுகள் கொடுத்து புதிய நோட்டுகள் வாங்குவதற்கு வதியாக  அதிகமான கவுண்டர்களும் திறக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.