டில்லி:
ஜூலை மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் செயல்படாது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம், விடுமுறை நாட்கள் (2-வது, 4-வது சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக்கிழமை) ரமலான் பண்டிகை விடுமுறை ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் மொத்தம் 11 நாட்கள் செயல்படாது.
பாரத ஸ்டேட் வங்கியை அதுசார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில் சேவை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
மேலும் ஜூலை மாதம் ஐந்து, ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. ஆகவே, ஜூலை மாதம் மொத்தம் 20 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் பணபரிவர்த்தனை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே அடுத்த மாதம் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணபரிவர்த்தனைகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.