திருப்பூர்

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வங்கிகள் வசூல் செய்த அபராத தொகை திரும்ப அளிக்கபடும் என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறைந்த பட்ச தொகை வைக்க தேவை இல்லாத ஜன் தன் வங்கிக் கணக்கை மக்களிடம் தொடங்கி வைத்தார். அதை ஒட்டி பல வங்கிகளில் இந்த ஜன் தன் கணக்குகளை நிர்வகிக்க போதிய நிதி வசதி இல்லாமல் போனது. அதை சமாளிக்க வங்கிகள் மற்ற கணக்கு வைத்திருப்போரின் குறைந்த பட்ச தொகையை அதிகரித்தன.

அத்துடன் இந்த குறைந்த பட்ச தொகையை வைத்திருக்காதவர்களிடம் வங்கிகள் கடும்  அபராதம் வசூலித்தன. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியும் தொடர்ந்து அபராதம் வசூலிக்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரூ. 10,000 கோடி அபரதம் வசூலித்துளதாக தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் திருப்பூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குறைந்த பட்ச தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த அபராதப் பணம் மீண்டும் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.  அவ்வாறு திருப்பி அளிக்க அரசு உத்தரவிடும்” என உறுதி அளித்துள்ளார்.