ஜெயம்கொண்டான்

ய்வு பெற்ற அரசு மருத்துவர் தமக்கு இந்தி தெரியாததால் கடன கிடையாது எனக் கூறிய வங்கி மேலாளருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் நகரில் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் வசித்து வருகிறார்.  கடந்த 25 ஆண்டுகளாகப் பல அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்த பாலசுப்ரமணியன் இறுதியாக ஜெய்மகண்டான் மருத்துவ மனையில் தலைமை மருத்துவராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவருக்கு ஜெயம்கண்டான் பகுதியில் சொந்த நிலம் மற்றும் வீடு உள்ளது.  இவர் கங்கை கொண்ட சோழபுரம் ஐ ஓ பி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்) கணக்கு வைத்துள்ளார்.   பேருந்து நிலையம் அருகில் உள்ள அவர் சொந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு தனது ஐ ஓ பி யில் கடன் கேட்க சென்றுள்ளார்.  வங்கியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் படேல் என்பவர் மேலாளராக பணியில் உள்ளார்.

வங்கி மேலாளர், ஆங்கிலத்தில், “உங்களுக்கு இந்தி தெரியுமா?” எனக் கேட்டுள்ளார். பாலசுப்ரமணியன் ஆங்கிலத்தில் “எனக்கு இந்தி தெரியாது.  ஆங்கிலமும் தமிழும் நன்கு தெரியும்” எனப் பதில் அளித்துள்ளார்.  மேலாளர். தாம் மகாராஷ்டிராவில் இருந்து வருவதாகவும் தமக்கு இந்தி மட்டுமே தெரியும் எனக் கூறி ஆவணங்களைப் பார்க்காமல் இருந்துள்ளார்.

பாலசுப்ரமணியம் தனது ஆவணங்களைக் காட்டிய போதும் அவற்றை பாராமல் மொழி பற்றியே பேசி கடன் கொடுக்க இயலாது எனத் திரும்பத் திரும்ப சொல்லி உள்ளார்.  ஓரளவுக்கு மேல் பேச முடியாமல் சோர்வடைந்து மருத்துவர் வீடு திரும்பி உள்ளார்.   அத்துடன் மொழி பிரச்சினை காரணமாக தமக்குக் கடன் அளிக்காத வங்கி மேலாளருக்கு நஷ்ட ஈடு கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.  மேலும் நீதிமன்றம் செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.