டெல்லி: பல்வேறு பண்டிகைகளால் 7 நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை வருவதால், வங்கிகள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
வங்கிகள் தனியார் மயம் எதிர்த்து, பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் 4 நாட்கள் வங்கிகள் சேவை முடங்கியது. இந்த நிலையில், இந்த மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் பல்வேறு பண்டிகை மற்றும் தேர்தல் வருவதால் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது என கூறப்படுகிறது.
அதன்படி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான 27ந்தேதி முதல் ஏப்ரல் 4ந்தேதி வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது.
7 நாட்கள் விடுமுறைக்காரணம் – விவரம்
மார்ச் 27 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை
மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை
மார்ச் 30 செவ்வாய்– ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை மற்ற மாநிலங்களில் செயல்படும்
மார்ச் 31 – நிதி ஆண்டு முடிவு விடுமுறை
ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை
ஏப்ரல் 2 – புனித வெள்ளி விடுமுறை
ஏப்ரல் 3ந்தேதி – சனிக்கிழமை வங்கி வேலை நாள்
ஏப்ரல் 4 – ஞாயிற்றுக் கிழமை
ஏப்ரல் 6 – தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் விடுமுறை
இடையில், மார்ச் 30ந்தேதி மற்றும் ஏப்ரல் 3ந்தேதி சனிக்கிழமை வங்கிகள் இயங்கும். ஆனால், மாதத்தின் முதல்நாள் என்பதில், அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டுவாடா காரணமாக, வங்கிகளில் கூட்ட நெரிசல் காணப்படும். அதே வேளையில், தொடர் விடுமுறை காரணமாக, பல வங்கி ஊழியர்கள், இடைப்பட்ட நாட்களில் பணிக்கு வராமல் விடுமுறை எடுப்பதும் வாடிக்கையான நடவடிக்கை. இதனால், பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என கருதப்படுகிறது.
பொதுமக்கள் உஷாராக இருப்பது நல்லது.