
டில்லி
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தரப்பட்ட ஒரு பதிலில் மோடி அரசில் வங்கி மோசடி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ரிசர்வ்.வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
புகழ்பெற்ற தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பலர் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து வங்கிகளில் மோசடி குறித்த செய்திகள் வருவது அதிகரித்து வருகின்றன.
சமூக ஆர்வலரும் பொருளாதர நிபுணருமான பிரசன்ஜித் போஸ் இது குறித்த விவரங்களைக் குறித்து ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி, “மோடி அரசு பங்கேற்ற கடந்த 4 வருடங்களில் இதற்கு முந்தைய ஐந்து வருடங்களை விட ரூ.55000 கோடி வங்கி மோசடி அதிகரித்துள்ளது. இது முந்தைய அரசை விட மூன்று மடங்கு ஆகும் அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசை விட தற்போதைய காலத்தில் மோசடி செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என பதில் அளித்துள்ளது.
இது குறித்து பிரசன்ஜித் போஸ், “அரசின் விசாரணைத் துறைகள் என்ன செய்கின்றன? இதுவரை எத்தனை மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பொதுத்துறை வங்கிகளில் இவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]