கொல்கத்தா;

ங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட புடவைகளை எரித்து கொல்கத்தாவில் போராட்டம் நடந்துள்ளது.

Kolkata, Nov 12 (ANI): Giri Govardhan Charitable Trust supporters stage a protest against the alleged attack on the Hindus in Bangladesh, in Kolkata on Tuesday. (ANI Photo)

தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனவே இதனைக் கண்டித்து இந்தியாவில் போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்று கொல்கத்தாவில் வங்காள இந்து சுரக்சா சமிதி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வங்கதேசத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்தியர்கள் அனைவரும் வங்கதேச பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜம்தானி புடவைகளை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டக்காரர் ஒருவர்இது குறித்து,

“வங்கதேசத்தில் இந்துக்களை தொடர்ந்து குறிவைப்பதையும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பூட்டும் கதைகளை பரப்புவதையும் கண்டிக்கிறோம். இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஜம்தானி புடவைகளை எரித்துவிட்டு, வங்காளதேச தயாரிப்புகளை புறக்கணிக்கவேண்டும் என மக்களை வலியுறுத்துகிறோம். இது எந்த மாதிரியான வங்கதேசம்? 1971-ல் விடுதலைக்காகப் போராடிய மக்கள் இப்போது தங்கள் வரலாற்றையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள் ”

எனத் தெரிவித்துள்ளார்.