தாகா:
ங்க தேசத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகளை  வங்கதேச பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
bnagaldesk
வங்கதேசத்தின் கல்யாண்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து சிறப்பு போலீஸ் படையினர், குற்றத்தடுப்பு நடவடிக்கை போலீசார் அடங்கிய கூட்டுப்படை அந்த பகுதிக்கு விரைந்து சென்றது.
இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதற்கு ‘ஆபரேஷன் புயல் 26’ என்ற பெயரிடப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான  7 அடுக்குமாடி வீடு சுற்றி வளைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர்  தீவிரவாதிகளை சுற்றி வளைத்து அதிரடியாக தாக்க ஆரம்பித்தனர். இந்த தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி காயமடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த இதற்கு ‘ஆபரேஷன் புயல் 26’  தொடர்பாக போலீஸ் ஐஜி ஷகிதுல் ஹோக் கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறினார்.