டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வங்கதேச அணி 296 ரன்களே எடுத்து, விண்டீஸ் அணியைவிட கணிசமாக பின்தங்கியது.

வங்கசேத அணியின் 3 வீரர்கள் அரைசதமடித்தாலும், அது விண்டீஸ் அணி வீரர்கள் அடித்ததைப் போன்று, பெரிய அரைசதங்களாக அமையவில்லை.

முஷ்பிக்குர் ரஹீம் 54 ரன்களையும், லிட்டன் தாஸ் 71 ரன்களையும், மெஹிதி ஹசன் 57 ரன்களையும் அடித்தனர். இறுதியில், இந்த அணியால் 296 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

விண்டீஸ் தரப்பில் ரக்கீம் கார்ன்வால் 5 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும், ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.