
டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில், 3ம் நாள் ஆட்டநேர முடிவில், விண்டீஸ் அணியைவிட, 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது வங்கசேத அணி. கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளன.
முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 430 ரன்களைச் சேர்த்தது. ஆனால், பதிலுக்கு, தனது முதல் இன்னிங்ஸில் விண்டீஸ் அணியால் 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் பிராத் வெய்ட் 76 ரன்களும், பிளாக்வுட் 68 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். டா சில்வா 42 ரன்களை அடித்தார். முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை மட்டுமே எடுத்தது விண்டீஸ் அணி.
வங்கதேசம் தரப்பில் மெஹ்தி ஹாசன் 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் பெற்ற 171 ரன்கள் முன்னிலையோடு, தனது இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேசம், 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
தற்போதைய நிலையில், மொத்தமாக 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது வங்கதேசம். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், விண்டீஸ் அணிக்கு அதிகபட்ச இலக்கை நிர்ணயித்து, வெல்ல முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]