டாக்கா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை எடுத்துள்ளது வங்கதேச அணி.

மொத்தம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தாடரில், வங்கசேதம் – விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கசேதம், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அந்த அணியின் துவக்க வீரர் ஷத்மன் இஸ்லாம் 59 ரன்களை அடித்தார். முஷ்ஃபிக்குர் ரஹீம் 38 ரன்களை அடிக்க, கேப்டன் மோமினுல் ஹேக் அடித்தது 26 ரன்கள் மட்டுமே.

தற்போது, ஷகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லிடன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகானுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.