கொழும்பு:
பங்களாதேஷ் அணியினர் 100வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை எதிர்த்து வெற்றி பெற்றதை கொண்டாடி வருகின்றனர். இது பங்களாதேஷ் அணியின் 9வது வெற்றி மட்டுமின்றி, இலங்கையுடன் பெறும் முதல் வெற்றியாகும்.
பங்களாதேஷ்&இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடந்தது. இன்று நடந்த இறுதி நாள் போட்டியில் நிர்ணயம் செய்யப்பட்ட 191 ரன் இலக்கை பங்களாதேஷ் வென்றது. முதல் பேட்ஸ்மேன் தமீம் இக்பால் 82 ரன்களும், சபீர் ரஹ்மாஜ் 41 ரன்களும் எடுத்திருந்தனர். 6 விக்கெட்களை இழந்து இந்த வெற்றியை பங்களாதேஷ் பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…
இலங்கை 338 மற்றும் 319 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 126 ரன்களும், பிரேரா 50 ரன்களும் எடுத்தனர்.
பங்களாதேஷ் 467 மற்றும் 191 ரன்கள் எடுத்தது.
கடந்த அக்டோபரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றி கண்டது. இதற்கு முன் ஜிம்பாப்பே மற்றம் மேற்கு இ ந்திய தீவுகள் அணியை பங்களாதேஷ் வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் அணியை தொடர்ந்து 100வது டெஸ்ட் போட்டியை வென்ற 4வது அணி என்ற பெருமையை பங்களாதேஷ் பெற்றுள்ளது.