டாக்கா: சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேசம் அனுமதிக்கிறது.
சர்வதேச அளவில், கொரோனாவானல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் குறையவில்லை. வல்லரசு நாடான அமெரிக்கா அதிக பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. கொரோனாவால் திணறி வரும் உலக நாடுகள், அதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியாவிலும் மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் வேகம்பெற்றுள்ளன. இந்தியாவில் மட்டும் ‘பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட், ஜைடஸ் கடிலா, பனசியா பயோடெக், இந்தியன் இம்முனோலாஜிகல், மின்வாக்ஸ், பயோலாஜிகள் இ ஆகிய நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன.
இந் நிலையில், சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேசம் அனுமதிக்க உள்ளது. சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய சாத்தியமான COVID-19 தடுப்பூசி 3ம் கட்ட சோதனைக்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், சீனாவிற்கு வெளியே தன்னார்வலர்களை சினோவாக் நிறுவனம் தேடியதாக வங்கதேச தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.