டாக்கா:

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பயணம் செய்த விமானத்தின் பைலட், பாஸ்போர்ட் இல்லாததால் கத்தாரில் சிக்கினார்.


பங்களாதேஷ் ஏர்லைன்ஸின் பைலட், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை பின்லாந்திலிருந்து அழைத்து வந்தார்.  அப்போது, பாஸ்போர் இல்லாததால் அந்த பைலட் கத்தாரில் சிக்கினார்.

ஜப்பான்,சவுதி அரேபியா, பின்லாந்து சென்று விட்டு கடந்த சனிக்கிழமை பங்களாதேஷ் திரும்பினார் பிரதமர் ஷேக் ஹசீனா.

அப்போது அவர் பயணித்த விமானம் கத்தாரில் தரையிறங்கியபோது, பைலட்டை சோதனையிட்டனர்.

அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. இதனையடுத்து, அவரை ஓட்டல் ஓன்றில் தங்க வைத்து கத்தார் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைலட் இன்னும் கைது செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]