டாக்கா
மியான்மரில் இருந்து வந்துள்ள அகதிகளை இன்னும் இரு ஆண்டுகளுக்குள் திருப்பி அனுப்ப வங்க தேசமும் மியான்மரும் ஒப்புக்கொண்டுள்ளன.
மியான்மரில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட ரோகிங்கியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது அங்கு அமைதி திரும்ப ஆரம்பித்துள்ளது. அதை ஒட்டி அந்த அகதிகளை திரும்ப அனுப்ப மியான்மரும் வங்க தேசமும் பேச்சுவார்த்தைகள் நடத்தின.
அந்த பேச்சு வார்த்தை முடிவில் வங்க அரசு ரோகிங்கியா இஸ்லாமியரை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இந்த திருப்பி அனுப்பும் பணி எப்போது தொடங்க உள்ளது என்பது பற்றி இரண்டு அரசும் ஏதும் தெரிவிக்கவில்லை.