கொல்கத்தா
வங்க தேசத்தை சேர்ந்த நடிகையான அஞ்சு கோஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜக அரசு ஆதரவு அளித்துவரும் தேசிய குடியுரிமை சட்டத்தின்படி வெளிநாட்டில் இருந்து வந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் இந்திய குடியுரிமை பெற முடியாத நிலை உள்ளது.
வங்க தேசத்தை சேர்ந்த நடிகை அஞ்சு கோஷ். இவர் பல வங்க தேச படங்களில் நடித்தவர் ஆவார். கடந்த 1989 ஆம் வருடம் இவர் நடித்த பேத்ர் மேயே ஜோஸ்னா என்னும் படம் இன்று வரை அதிக வெற்றி பெற்ற வங்க தேச திரைப்படம் என பெயர் பெற்றுள்ளது. இதற்கு நாடோடியின் மகள் ஜோஸ்னா என பொருளாகும்.
நேற்று இவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் முன்னிலையில் நடந்த விழாவில் பாஜகவில் இணைந்த அஞ்சு கோஷிடம் பாஜக கொடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு வந்திருந்த செய்தியாளர்கள் அஞ்சு கோஷிடம் வினாக்கள் எழுப்பினர்.
அவர்கள் தேசிய குடியுரிமை சட்டத்தின் படி அஞ்சு கோஷ் இந்திய குடியுரிமை பெற்றுள்ளாரா என கேட்டுள்ளனர். அதற்கு அஞ்சு பதில் அளிக்க மறுத்துள்ளார்.