பெங்களூரு

கில உலக பொருளாதார கண்காணிப்புத் துறை பெங்களூரு நகரத்தை டிஜிட்டல் துறையில் முதலிடம் பெற்ற நகரமாக அறிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் அவைகள் அமைந்துள்ள உலக நகரங்களையும் அகில உலக பொருளாதாரக் கண்காணிப்புத் துறை ஆய்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மிகச் சிறந்த நகரங்களாக உலகில் உள்ள 45 நகரங்களில் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 45 நகரங்களில் மிகவும் சிறந்த டிஜிடல் துறை நகரமாக பெங்களூரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.    அந்த அறிவிப்பில், “இந்திய கரங்களில் தகவல் தொழில் நுட்பத்துறைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன.    இங்குள்ள பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பலவும் அதே நேரத்தில் பல தொல்லைகளையும் சந்தித்து வருகிறது.   அவைகள் தொழில்நுட்பக்க் குறைபாடுகள், மாசு, ஏழ்மை, மற்றும் சுகாதாரமின்மை ஆகியவையே ஆகும்.   இந்திய நகரங்களில் 10ல் 8 நகரங்களில் இந்த தொல்லைகள் உள்ளன.” என தெரிவித்துள்ளது.

பெங்களூருக்கு அடுத்த படியாக சான் ஃப்ரான்சிஸ்கோ,  மும்பை, டில்லி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.    டோக்கியோ, யோகோஹோமா மற்றும் பெர்லின் ஆகிய நகரங்கள் பின் தங்கி உள்ளன.   ஆய்வில் கலந்துக் கொண்ட நிறுவனங்களில் 48% நிறுவனங்கள் தங்களின் பணி இடத்தை மாற்றிக் கொள்ளும் உத்தேசத்தில் உள்ளன.    இதில் ஆசிய நிறுவனங்களில் 50%மும்  அமெரிக்க நிறுவனங்களில் 48% மும்,  ஆஸ்திரேலிய நிறுவனங்களில் 46%மும், ஐரோப்பிய நிறுவனங்களில் 42%மும் அடங்கும்.