
சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், வெற்றிக்கான அதிக சாத்தியத்துடன் ஆடி வருகிறது கோலியின் பெங்களூரு அணி.
20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிவரும் பெங்களூரு அணி, 12 ஓவர்களில், 2 விக்கெட்டுகள் இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போதைய நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 65 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. எனவே, இதேநிலை தொடர்ந்தால், பெங்களூரு அணி, இப்போட்டியை எளிதாக வெல்லும் என்றே கணிக்கப்படுகிறது.
துவக்க வீரர் சுந்தர், 16 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். கேப்டன் கோலி 28 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து களத்தில் உள்ளார். கிளென் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 34 ரன்களுடன் ஆடிவருகிறார். அவர் 2 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
முன்னதாக, ரஜாட் பட்டிடார் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மும்பை தரப்பில், தற்போதுவரை 5 பெளலர்கள் பந்துவீசி வருகிறார்கள்.
[youtube-feed feed=1]