பெங்களூரு:
பெங்களுரில் 7 ஆண்களை மயக்கி திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் கிழக்கு பகுதி கேஜிஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் யாஸ்மின் பானு. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சாராய் பாளையத்தைச் சேர்ந்த இம்ரான் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இம்ரான் பெயரில் உள்ள எல்லா சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றும்படி யாஸ்மின் பானு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திடீரென யாஸ்மின் தலைமறைவாகி விட்டார்.
அப்போது யாஸ்மின், இம்ரானிடம் இருந்து பல லட்சம் ரூபாயை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் இம்ரானால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. தொடர்ந்து தேடி வந்தார்.
இதற்கிடையில், பலபேரை ஏமாற்றி பணம் பறித்து வரும் பெண் பற்றிய தகவல் இம்ரானுக்கு கிடைத்தது. அதையடுத்து அவர் அந்த பெண்ணை இம்ரான் கண்காணித்தபோது, அவர்தான் யாஸ்மின் என தெரிய வந்தது.
உடனே இதுகுறித்து, கேஜி ஹல்லி போலீஸ் நிலையத்தில் இம்ரான் புகார் செய்தார்.
போலீசார் யாஸ்மினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் இதுவரை 7 தொழிலதி பர்களை மயக்கி பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது.
இம்ரானை விட்டு பிரிந்த யாஸ்மின் அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார்.
அவர்கள் அனைவரிடமும், அவர் உல்லாசமாக இருந்த சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுவரை எங்கள் 7 பேரிடமும் பறித்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூறினார்.
இதையடுத்து யாஸ்மின் மீது, அப்சல், சோயிப் ஆகியோரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். அப்போது, அவர்கள் யாஸ்மினால் தாங்கள் மிரட்டப்பட்டது பற்றியும், எங்களிடம் பறித்த பணத்தை பறிமுதல் செய்து தர வேண்டும் என்ம்று, தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என 3 பேரும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்த செய்தி அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel