சென்னை: தமிழ்நாட்டில், உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு ( Smoking Room ) தடை விதித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த அரசாணை அரசிதழிலில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உணவுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து அரசனை உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்களில் புகைபிடிக்கும் கூடத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றிய நிலையில் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிறித்து புகைபிடிக்கும் அறை மற்றும் கூடத்தை எங்கும் திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கும், பொது இடங்களில் பீடி,சிகரெட் புகைப்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால், சென்னை உள்பட மாநிலம் முழுவருதும் புகையிலை பொருட்கள் தடையின்றி தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. பொதுஇடங்களில் பீடி,சிகரெட் புகைப்பதும் சுதந்திரமாக நடக்கிறது. இதனால் புகைப்பவர்கள் மட்டுமன்றி புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். டீ கடை,பெட்டி கடைகளில் புகைப்பவர்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை பற்றி கவலைப்படாமல் பீடி, சிகரெட் மிச்சங்களை அருகாமையில் உள்ள கடை வாசல்களில் வீசி விடுகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொதுசுகாதார துறையினர், கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் நோய் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், பெரிய பெரிய ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் மால்களில் புகைப்பிடிப்பாளர்களின் வசதிகளுக்காக புகை பிடிக்கும் அறை என தனி அறை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற மதுபானக் கூடங்களை தவிர்த்து வேறு எங்கும் புகைபிடிக்கும் அறைக்கு அனுமதியில்லை, விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை, ₹20,000 முதல் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.