சென்னை: பந்துகளில் எச்சிலைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, தட்டையான மைதானங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா.
சேப்பாக்கம் மைதானத்தின் நிலைமை, இன்றைய சூழலில் பந்துவீச்சாளர்களை பெரியளவில் கைவிட்டது. 40 ஓவர்களுக்கு மேல் நிலைமை மிகவும் மோசமானது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து பவுலர்கள், களத்தில் நிலைத்து நின்றனர். பந்துகள் எதிர்பார்த்த அளவிற்கு பவுன்ஸ் ஆகவில்லை மற்றும் சுழலவில்லை.
இதனால், பவுலர்கள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனைத்தான் தற்போது புலம்பியுள்ளார் பும்ரா. அவர் கூறியுள்ளதாவது, “பந்தானது, குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மிருதுவாக மாறிவிட்டது. பவுன்ஸ் செய்ய ஒத்துழைக்கவில்லை.
பந்தைப் பளபளப்பாக்குவதற்கு, குறைந்த வாய்ப்பே நமக்கு இருந்தது. எனவே, இந்தச் சூழலில் எங்களால் முடிந்ததை செய்துபார்த்தோம். கொரோனா தொடர்பான புதிய விதிமுறைகளால், எங்களால் எச்சிலைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால், பந்தைக் கையாள்வதில் பெரிய சிரமங்களை சந்தித்தோம்” என்றுள்ளார் பும்ரா.