தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால் .

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் அமலா பாலிற்கும் காதல் மலர்ந்து மணமுடித்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தும் விட்டனர் .ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் திருமண கோலத்தில் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த புகைப்படத்தை பாடகர் பவ்னிந்தர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

வெளியிட்ட சிறிது நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.

தனது அனுமதியின்றி, தங்களுக்கு திருமணம் ஆனதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டதாக பவ்னிந்தர் சிங் மீது வழக்கு தொடர அனுமதிக்ககோரி அமலாபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த காரணமாக, அமலா பால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து, உத்தரவிட்டுள்ளனர்.