சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானக்களுக்கு தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானங்களுக்கு தென்மண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகியவற்றுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி, ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அதாவது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலைப் பாதுகாக்கும் நோக்கில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் எவ்விதப் புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
இந்த அறிவுறுத்தலை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) கடந்த அக்டோபர் 2025-ல், குறிப்பிட்ட அந்த எல்லைக்குள் கட்டுமான அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த முடிவால் அப்பகுதியில் நடைபெற்று வந்த பல கட்டுமானத் திட்டங்கள் பாதியிலேயே முடங்கியுள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கிரடாய்’ (CREDAI) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், சரியான அறிவியல் பூர்வ ஆய்வுகள் ஏதுமின்றி இந்த ஒரு கிலோமீட்டர் சுற்றளவு எல்லை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு தன்னிச்சையானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும்.” என்று கோரியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ தரப்பு விளக்கங்களைக் கோரியுள்ளது. இதற்காக 3 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
[youtube-feed feed=1]