சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இன்று காலை 9மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,. போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ்-க்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதும், போலீஸ் பாதுகாப்புடன் அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளதும். சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்துக்கு சென்றுள்ள நிலையில், ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகம் வந்துள்ளது, திமுக அரசு அவருக்கு சாதகமாக இருப்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
இதனால், சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகஅரசுக்கு சாதகமாக நடந்துகொள்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது காவல்துறை திடீரென பாதுகாப்பு வழங்கியிருப்பதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.