பாரீஸ் ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும்படி இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருப்பதும் அதை அமெரிக்கா ஏற்றிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்று ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.
உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவில் உயர்ந்திருப்பது குறித்தும், அதனை 1.5 டிகிரி செல்சியஸாகக் குறைப்பது தொடர்பாகவும் கடந்த 2015-இல் பாரீஸ் நகரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அது தொடர்பான செயல் திட்டங்கள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் 175 நாடுகள் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். அப்படி விரைவுபடுத்தப்படும்போது உலகில் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை அதிக அளவு வெளியேற்றும் நாடுகள் ஒப்பந்தத்தின்படி அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு தங்கள் நாட்டிலிருந்து வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவை குறைத்தாக வேண்டும். இதன்மூலம் வெப்பமயமதல் கணிசமாகக் குறையும்.
இந்திய பிரதமர் மோடியின் இந்த சுற்றுச்சூழல் அக்கறையை ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.