யாழ்ப்பாணத்தில் பான் கி மூன்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஆர்ப்பாட்டம்

Must read

யாழ்ப்பாணம்:
லங்கை வந்துள்ள ஐ.நா செயலாளர் பான் கி மூன் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
b
ஐ.நா.  செயலாளர் பான் கி மூன், மூன்று நாள் பயணமாக இலங்கை வந்திருருக்கிறார்.  இன்று அவர் யாழ்ப்பாணம் சென்றபோது, அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் வட மாகாண ஆளுநர் அலுவலகப் பகுதியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
c
காணாமல் போயுள்ள தமது உறவினர்களை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். ஐ.நா. செயலாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கவும் இருந்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் கூறி ஐ.நா செயலாளரை மாற்று வழியில் காவல்துறையினர் அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆனாலும் ஐ.நா அலுவலக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜர்கள் மற்றும் கடிதங்களை பெற்றுச் சென்றனர்.

More articles

Latest article