
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்காக ‘கொரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பு’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார் சிரஞ்சீவி.
இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் பங்காக 1 கோடி 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாயும், கொரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel