தமிழின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல். அவரது காதல் திரைப்படம் அனைவராலும் பேசப்பட்டது.
அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வழக்கு எண் 18/9 2012-ல் வெளியானது. நடுவில் யார் இவர்கள், ர ர ராஜசேகர் என இரு படங்களை அறிவித்தார். ஆனால், இரண்டும் அறிவிப்போடு நின்றது.
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு படத்தை பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். ‘ நான் நீ நாம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வீரா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடிக்க, சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
எடிட்டராக தீபக் , இசை ஜாவித் ரியாஸ். பாடல்களை யுகபாரதி, லலிதானந்த் இருவரும் எழுதுகிறார்கள். ப்ளூமூன் கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.