பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ்.
தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிட்டதைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பாலாஜி தெரிவித்த கருத்துக்கு நேர் எதிராக அவரே மதுவில் குளிக்கும் வீடியோவையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.