பாலாஜிக்கும், ஷனம் ஷெட்டிக்குமான மோதல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தபிறகும் தொடர்கிறது.

அண்மையில், Behindwood விருது நிகழ்ச்சியில் Biggest Sensation On Reality Television என்ற பட்டம் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அப்போது, தான் பேசியதை Behindwood நிறுவனம் ஒளிபரப்பாமல் கட் செய்ததால், அவர்கள் கொடுத்த அந்த விருதை திருப்பிக் கொடுக்கப்போவதாக பாலாஜி கூறியுள்ளார்.

சக போட்டியாளர்களை விமர்சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பேசியதை, அவர்கள் நீக்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் டிவிட்டரில் கூறியிருந்தார் பாலாஜி.

அவரின் இந்தப் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஷனம், பிக்பாஸ் ஷோவில் தன்னை தரக்குறைவாக பேசியபோது சகபோட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் பங்கெடுக்காத பெண்களின் எதிர்காலத்தை நீங்கள் நினைத்தீர்களா?, என்னையும், மற்ற போட்டியாளர்களையும் மோசமான வார்த்தைகள் மற்றும் Attitude -ஐ காண்பிக்கும்போது, எதிர்காலத்தைப் பற்றி நினைத்தீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் இழந்த 2 நிமிட புகழுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் ஷனம் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]