2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டிதமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அமேசான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 13-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் ரட்டிலால் மேத்தா தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]