2011-ம் ஆண்டு இயக்குனர் பாலா கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான படம் அவன் -இவன்.

அவன்- இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை தவறாக சித்தரித்து வெளியானதாக வழக்கு தொடரபட்டது

சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன் தயாரிபு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்துடன் சமாதானம் பேசி தன்னை வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.

நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதனால் சில ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெறாமல் இருந்தது. தடை நீங்கிய நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது..

கடந்த பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்த நிலையில் நடிகர் ஆர்யா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் மனதார குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யப்படாததால் இயக்குநர் பாலாவை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்தார்.

என் மீது போடப்பட்ட பொய்யான அவதூறு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி எனக் கூறியுள்ளார் இயக்குநர் பாலா.