டெல்லி: சாதாரண சூழலில் பா பாலியல் வன்முறை மற்றும் வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, சாதாரண சூழலில் பாலியல் வன்முறை, கொலை, மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணை தொடங்கியப்பின் ஜாமீன் வழங்கக்கூடாது என கூறியுள்ளது.
வழக்கு பதியப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் விசாரிக்கப்படும் முன்னர் அல்லது பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தில் எதாவது குளறுபடிகள் இருந்தால் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுகிறது. இது சமீப காலமாகவே நடந்து வருகிறது. இது சரியானது அல்ல என்பது எங்கள் பார்வை.
உயர் நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களை குறிப்பிட்டு, “சாதாரண சூழலில் பாலியல் வன்முறை, கொலை, மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணை தொடங்கிய பின் ஜாமீன் வழங்கக் கூடாது. ஒருவேளை வழக்கு விசாரணை தாமதம் ஆனால், அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது தவறு இல்லை என்னும் பட்சத்தில் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சீக்கிரம் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம்.
அதனால், வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு விட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக இருந்தாலும் அல்லது நிரபராதியாக இருந்தாலும் அந்த வழக்கு இறுதி வரை செல்ல வேண்டும். இடையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தோதாக எதாவது முடிவு எடுக்கப்பட்டால், அது வழக்கு விசாரணையை பாதிக்கும்” என்றும் தெரிவித்துள்ளனர்.