சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதை அடுத்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு மூன்று ஜீயர்கள் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக நரசிம்மன் மீது போலீசார் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் வி.சக்திவேல் ராஜன் காவல்துறையில் புகார் அளித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் நடந்த பாத பூஜையில் மற்ற மத தலைவர்களுடன் கலந்து கொண்டதாக இரண்டு யூடியூப் சேனல்களின் விளம்பரதாரர்கள் மீது பொய்யான தகவலை பரப்பியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது. அதன்படி, ‘நமது கோயில்கள்’ யூடியூப் சேனல் விளம்பரதாரர் ரெங்கராஜன் நரசிம்மன், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல், பெலிக்ஸ் ஜெரால்டு, எம்.கலஞ்சியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். மேடைகளில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல்கள் மூலம் மடத்தைப் பற்றிய தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அரசை விமர்சித்து வரும் ரெங்கராஜன் நரசிம்மன், மீது அடுத்தடுத்து வழக்குகளை பதிந்து காவல்துறை அவரை இரவோடு இரவாக வீடு ஏறி குதித்துச் சென்று கைது செய்தது. மொத்தம் 7 வழகுக்களை அடுத்தடுத்து தொடரப்பட்டு, அவரை சிறையில் வைத்தது.
இதை எதிர்த்து நரசிம்மன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள், அவர்மீதான வழக்குகளில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். அரசு தொடர்ந்த 7 வழக்குகளிலும் ஜாமின் பெற்ற ரெங்கராஜன் நரசிம்மன், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.