சென்னை:
சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம் மீது புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது. மேலும் குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியது.
இதை எதிர்ப்பு தெரிவித்து, அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கொ ரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா?  என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம்  சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன் என்ற வேதனை தெரிவித்ததுடன், கொரோனா மருந்து விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியது.
இந்த நிலையில், சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அவர்  சென்னையை விட்டு செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.