மனாமா:

பன்றி இறைச்சி விற்பனை மற்றும் இறக்குமதிக்கு நாடு முழுவதும் தடை விதிக்க பக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் இந்த திட்டத்தால் நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமை பறிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் அரசு தரப்பில் கூறுகையில், ‘‘பக்ரைனில் பன்றி இறைச்சி உள்பட அனைத்து விதமான இறை ச்சிகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றின் சுகாதர தன்மை தொடர்ச்சியாக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக பன்றி இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2015ம் ஆண்டு எம்பி அப்துல்லா பின் ஹவாலி என்பவர் பன்றி இறைச்சி விற்பனை மற்றும் இற க்குமதிக்கு தடை கோரினார். ‘‘பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான பொருட்களை கையாளுவது இஸ்லாமிற்கு எதிரானதாகும். பக்ரைன் ஒரு முஸ்லிம் நாடு. அதனால் ஷரியா விதிகளை பின்பற்ற வேண் டும்’’ என்று கூறியிருந்தார்.

மேலும் பன்றி இறைச்சியோடு தொடர்பு வைத்திருப்பவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்ற சுரா குழுவின் பரிந்துரைகளும் நாடாளுமன்ற மேலவையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறஸ்தவர்களில் பெரும்பாலும் மாட்டு இறைச்சி உண்பவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க பாஜ துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் முஸ்லிம் மதத்தினரால் அதிகளவில் வெறுக்கப்படும் பன்றி இறைச்சிக்கு தடை விதிக்க முஸ்லிம் நாடான பக்ரைன் தடை விதிக்க மறுத்து முஸ்லிம் அல்லாத மதத்தினரின் உரிமையை ப £துகாத்துள்ளது. இதை பாஜ முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் எதிர்பார்க்கின்றனர்.