த்ரிநாத்

த்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவும்.   எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்கள் குளிர்காலத்தை முன்னிட்டு ஆறு மாதங்கள் நடை அடைக்கப்படும்.  கோடைக் காலம் ஆறு மாதங்கள் திறக்கப்படும்.

அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் பத்ரிநாத், கேதார் நாத் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களும் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டன.   அதன்பிறகு கொரோனா தாக்கம் காரணமாக இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.    தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பத்ரிநாத் ஆலயம் குளிர்காலத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டுள்ளது.  இன்னும் ஆறு மாதங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.  கேதார்நாத், கங்கோத்ரி ஆலயங்கள் ஏற்கனவே குளிர் காலத்துக்காக நடை அடைக்கப்பட்டுள்ளன.