ஐதராபாத்,

பிரபல இந்திய பேட்மின்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா, ஐதராபாத்தில் புதிய பயிற்சி மையம் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த மையத்தின் மூலம் அடுத்த மாதம் முதல் பேட்மின்டன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

இந்தியாவின்,  நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா குட்டா,  மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ஆனால் தற்போது அவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்தியாவுக்காக பேட்மிண்டன் போட்டிகளை விளையாடி வரும் இவர் ஆசியப் போட்டி உட்பட ஏராளமான போட்டிகளில் பதங்கங்களை குவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று மிகும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை தழுவி வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளில் தனது பெயர் இடம்பெற வில்லை என்பதால், தனது டிவிட்டர் பக்கத்தில்

“பத்மவிருதுகளுக்கு தம்மை தேர்வு செய்ய, போட்டிகளில் விளையாடி இதுவரை தான் வாங்கிய பதக்கங்கள் போதாதா? உரிய தகுதிகள் இருந்தும் சிபாரிசுகளை தேடி தான் ஏன் செல்ல வேண்டும்?” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் தற்போது இளம் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பேட்மின்டன் அகாடமி உருவாக்கி வருகிறார். தற்போது ஐதராபாத்தில் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மையம் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

இதுகுறித்து கட்டா கூறியதாவது,

இளம் வீரர்களின் புதிய திறமைகளைக் கண்டுபிடித்து அவர்களின் ஆற்றலை வளர்க்க இந்த மையம் உதவும் என்றும், இதற்காக சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், டெல்லி,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இதனை விரிவாக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்த ஜூவாலா குட்டா, நகர்ப்புறங்களில் மட்டுமே பேட்மிண்டன் பயிற்சி கிடைக்கும் என்ற நிலையை மாற்ற கிராமங்களுக்கும் தமது பயிற்சி மையத்தை விரிவுபடுத்த இருப்பதாக கூறினார்.