டெல்லி: மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 84,768 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
அமர்நாத் பலி லிங்கத்தை தரிசிக்கிக பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தரகள் பாயத்திரை சென்று வருகிறார்கள். இன்று இரண்டு முகாமில் இருந்தும் 17,202 பேர் யாத்திரை மேற்கொள்ள இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வானிலை மேம்படுவதால் புனித தலத்திற்கான யாத்திரை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு வருடாந்திர யாத்திரை தொடங்குகிறது அமர்நாத் புனித சன்னதிக்கான 62 நாள் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடையும். மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் பால்டால்- ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் தொடங்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 12,756 அடி உயரத்தில் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 141 கிமீ தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் புனித குகை, ஆண்டு முழுவதும் பனிப்பாறைகள் மற்றும் பனி மூடிய மலைகளால் மூடப்பட்ட லாடர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர்.
இன்று காலை 7,010 யாத்ரீகர்கள் கொண்ட எட்டாவது குழு 247 வாகனங்களின் தொடரணியில் பால்டால் மற்றும் பஹல்காம் என்ற இரட்டை அடிப்படை முகாம்களுக்கு புறப்பட்டது. இவர்களில் 5179 ஆண்கள், 1549 பெண்கள், 21 குழந்தைகள், 228 சாதுக்கள் மற்றும் 33 சாத்விகள். 240 யாத்ரீகர்கள் 94 வாகனங்களில் பால்டால் நோக்கிச் சென்றனர், 4600 யாத்ரீகர்கள் 153 வாகனங்களில் பஹல்காமுக்கு புனித குகைக் கோவிலை தரிசனம் செய்ய புறப்பட்டனர். நேற்று (வியாழன்) அன்று, 17,202 யாத்ரீகர்கள் புனித குகைக் கோயிலில் தரிசனம் செய்தனர், இதுவரை இயற்கையான பனி லிங்கத்தை தரிசனம் செய்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 84,768 ஆக உயர்ந்துள்ளது.