சென்னை:

மிழகத்தில் குறிப்பிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக சேர்ககப்பட்ட இளம் பெண்கள், அவர்களுக்கு ஏற்றப்பட்ட  ரத்தத்தின் காரணமாக, பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களில் 15 பேர் பலியானதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

பிரசவ காலங்களில் வெளியாகும் அதிக ரத்தப்போக்கு காரணமாக, பல பெண்களுக்கு ரத்தம் ஏற்றப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், இந்த ரத்தம் சரியான முறையில் பரிசோதனை செய்து, பின்னர் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறதா என்பதில் பல்வேறு ஐயங்கள் எழுகின்றனர்.

அதுபோல, தொழில்முறை நோக்கில் தொடங்கப்பட்டுள்ள பல தனியார் ரத்த வங்கிகள், பணத் துக்கு ஆசைப்பட்டு, ரத்தம் பெற்று சேமித்து வைத்து விற்பனை செய்கிறது. அவர்கள்  சரியான முறையில் ரத்தங்களை சேமித்து வைப்பது இல்லை என்றும், சிதைந்துபோன ரத்தம் மற்றும் நோய் பாதிப்பு உள்ள ரத்தங்களையும் சேமித்து வைத்து, அதை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றன.

இந்த நிலையில்,  தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் கடந்த  4 மாதங்களில் கிட்டத்தட்ட 15 கர்ப்பிணி பெண்கள் ரத்த பக்கவிளைவுகளால் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தியபோது, அங்கு  சிதைந்த நிலையில் உள்ள ரத்தங்கள் இருந்ததாகவும், அதை  பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநிலசுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு சாத்தூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.