உடலுக்கு வெளியே இதயம் துடித்தபடி பிறந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்!

Must read

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

vanellope

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியில் வசிக்கும் வில்கின்ஸ் – நவோமி பிண்ட்லே தம்பதியினருக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. வனெலோப் ஹோப் என பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறக்கும் போதே நெஞ்செலுப்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே துடித்தப்படியும் இருந்தது.

இது குழந்தையின் பெற்றோரு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சிக்கள் மேற்கொண்டனர். அதன்பின்னர் அந்த குழந்தைக்கு கடந்த ஓராண்டாக 3அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 14 மாதங்கள் மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த குழந்தை உடல்நிலை தேறியதை தொடர்ந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

மரணத்தின் விளிம்பில் இருந்த குழந்தை மருத்துவர்களின் விடா முயற்சியினால் உயிர் பிழைத்தது பெற்றோரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது குழந்தை மீண்டு உயிருடன் வீட்டிற்கு அழைத்து வந்தது அளவுக்கடந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குழந்தையின் தாய் நவோமி பிண்ட்லே தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தை சிரமம் இன்றி மூச்சுவிடுவதற்காக 24 மணி நேரமும் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வெளியில் இதயம் துடித்தப்படி பிறந்த குழந்தை அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது.

More articles

Latest article