நீண்டகாலம் அமெரிக்க எம் பியாக பணியாற்றிய ஜான் டிங்கெல் மறைவு: டிரம்ப் இரங்கல்

வாஷிங்டன்

அமெரிக்காவின் வரலாற்றில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த ஜான் டிங்கெல் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜான் டிங்கெல் என்பவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது இளமைப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தார். இவர் கடந்த 1955 ஆம் ஆண்டு முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வென்றார். அது முதல் இவர் தொடர்ந்து 59 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

இவரை பாராளுமன்ற சிங்கம் என பலரும் புகழ்ந்துள்ளனர். இவர் இதுவரை 11 அதிபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் இவருடைய கருத்துக்களை அரசு கேட்டு வந்தது குறிப்டத்தக்கது. இவர் எரிசக்தி மற்றும் வர்த்தக் குழுவில் பணி புரிந்தவர் ஆவார்.

தற்போது 92 வயதாகும் ஜான் டிங்கெல் வயது மூப்பு காரணமாக சில காலமாக உடல் நலம் குன்றி இருந்தார். நேற்று முன் தினம் இரவு இவர் தனது இல்லத்தில் மரணம் அடைந்தார். அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் அவருடைய மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள்னர்.

அதிபர் உத்தரவுக்கு இணங்க வெள்ளை மாளிகை, அரசு அலுவலகங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: america, Long term mp, old age, passed away, அமெரிக்கா, ஜான் டிங்கெல், நீண்ட நாள் எம் பி, மரணம், வயது மூப்பு
-=-