மும்பை,

.பி.யில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி நிலத்தை இந்துக்களிடம்  ஒப்படைக்கலாம் என்று இஸ்லாமிய மதகுரு மவுலானா ஒருவர் கூறி உள்ளார்.

1992: டிசம்பர் 6ல் மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதையடுத்து, விசாரணை நீதிமன்ற உத்தரவு வரும்வரை அயோத்தி யின் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதியில், எந்த கட்டுமானப் பணிகளோ அல்லது வழிபாடோ இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தற்போது பாபர் மசூதி குறித்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலை யில்,  மும்பையில் உலக அமைதி மற்றும் நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.

இதில், திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, யோகாகுரு பாபா ராம்தேவ், உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய இஸ்லாமிய ஷியா பிரிவு மத குருவான மவுலானா கல்பி சாதிக், பாபர் மசூதி வழக்கில் சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமானதாக இருந்தால், இஸ்லாமியர்கள் அதனை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரத்தில், தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால், அந்த நிலத்தை இஸ்லாமி யர்கள் மகிழ்ச்சியுடன் இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருமானால், அந்த நிலத்தை, இந்துக்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும் என, இஸ்லாமிய மத குரு மவுலானா கல்பி சாதிக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஷியா வக்பு வாரியம் சார்பில் தாக்கல் செய்த அபிடவிட்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சற்று தூரத்தில் மசூதி கட்டிக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.