லக்னோ:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி,  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. ஆனால், கோர்ட்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து, முகாந்திரம் இல்லை என்று  வழக்கிலிருந்து விடுவித்தது.

அதைத்தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அலகாபாத் கோர்ட்டும் அவர்களை விடுவித்தது சரிதான் என்று  உறுதி செய்தது.

இதற்கிடையில் வழக்கில் இருந்து பாரதியஜனதா தலைவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து  சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதி மன்றம்  அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கை மீண்டும் விசாரிக்க லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அப்போது,  லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழக்கை தினமும் விசாரித்து, 2 ஆண்டில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

கடந்த விசாரணையின்போது  நீதிமன்ற சம்மன் பெற்ற ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த 5 மூத்த தலைவர்கள் ஆஜராகினர். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி  ன்று லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, நீதிபதி வரும் 30ந்தேதி  பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

லக்னோ கோர்ட்டின் உத்தரவு டில்லி  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்வானிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.