பாலியல் வழக்கு காரணமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிரபல சாமியார் குர்மீத் ராமை, சிறைக்கு தள்ள காரணமாக இருந்த சிஷ்யையின் வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங்க்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்குள்ள தேரா ஆசிரமத்தில் சாத்விக்கள் என்றழைக்கப்படும் இளம்பெண் சன்னியாசிகளும் தங்கியிருந்து சாமியாருக்கு சேவை செய்து வருகின்றனர்.
இந்த இளம்பெண்களை சாமியார் அவ்வப்போது பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக கூறப்படு கிறது. அவரது ஆசைக்கு இணங்க மறுக்கும் இளம்பெண் சந்நியாசிகளை பலாத்காரப்படுத்துவதும் அவரது வாடிக்கை.
இதுபோல் அவரது பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு இளம் பெண் சன்னியாசிகள் கொடுத்த புகார் காரணமாகவே சாமியார் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், தற்போதுதான் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்மீது புகார் கொடுத்த ஒரு பெண் சன்னியாசியின் வாக்குமூலம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவரது வாக்குமூலம்தான் சாமியாருக்கு அதிரடியாக 20 ஆண்டுகள் சிறையுடன் 30 லட்சம் அபராதமும் விதிக்க வழி செய்துள்ளது.
அந்த இளம் பெண் சன்னியாசி கொடுத்த வாக்குமூலம் என்ன என்பதை பார்க்கலாம்…
கடந்த 1999ம் ஆண்டு ஜுலை மாதம் நான் தேராவில் (குர்மீத்தின் ஆசிரமம்) சாத்வியாக சேர்ந்தேன். (சாத்வி என்பது பெண் சன்னியாசிகளுக்கு வட மாநிலங்களில் கூறப்படும் பெயர்.)
அப்போது என்னை சந்தித்த மற்ற சாத்விக்கள், பாபா (குர்மீத்) உனக்கு மன்னிப்பு கொடுத்து விட்டாரா என்று வினவினார்கள். அவர்களது கேள்வி எனக்கு புரியவில்லை. நான் குழப்பத்தில் இருந்தேன். மன்னிப்பு என்றால் என்ன என்று அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் என்னிடம், சாமியார் உனக்கு மன்னிப்பு தரும்போ தெரிய வரும் என்று கூறிவிட்டார்கள்.
அதையடுத்து நான் மன்னிப்பு என்றால் என்ற குழப்பத்துடன், சாமியார் குர்மீத் அறைக்கு பெண் சன்னியாசிகள் அடிக்கடி சென்று வருவதை அறிந்து, எதற்காக அவரது அறைக்கு தனிமையில் செல்கிறார்கள் என்று எண்ணிணேன்.
இந்நிலையில், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 28-29 அன்று இரவு பாபா குர்மீத் தன்னை அவரது அறைக்கு அழைப்பதாக அங்கே பொறுப்பில் மற்றொரு சன்னியாசி கூறினார். அதையடுத்து அவருடன் நான் பாவின் அறைக்கு இரவு 8.30 மணி அளவில் சென்றேன்.
பாபா அறையின் அழைப்பு மணியை அழுத்தியதும் அவர் கதவைத் திறந்தார். நான் அவரை வணங்கினேன். உடனே பாபா, கதவை மூடிவிட்டு தரையில் அமருமாறு கூறினார். அதன்படி நான் தரையில் அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில், பாபா அந்த அறையில் உள்ள தனது படுக்கையில் அமர்ந்துகொண்டு, என்னையும் அவரது அருகில் வந்து அமர கூறினார். நான் தயங்கினேன். பாபா மீண்டும் வற்புறுத்தியதை தொடர்ந்து, அவருக்கு சற்று தொலைவில் அமர்ந்தேன்.
அப்போது, பாபா மற்ற சாத்விக்களைப் பற்றி என்னிடம் விசாரித்துக் கொண்டே என்னை அவர் தொட்டார். அதை நான் தடுத்தேன். ஆனால் பின்னர் அவர் வலுக்கட்டாயமாக என்னைத் தொட்டார்.
இதனால் பயந்துபோன நான் அழத் தொடங்கினேன். அபப்போது பாபா, இந்த சம்பவம் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். மேலும், நான் என் வாழ்வில் என்ன தவறு செய்திருக்கிறேன் என்றுகூறி பாவ மன்னிப்புக் கேட்குமாறு மிரட்டினார்.
அதைத்தொடர்ந்து நான், கல்லூரியில் படித்தபோது நடைபெற்ற ஒரு சிறு சம்பவத்தைச் சொன்னேன்.
அதற்கு பாப, சாத்விக்கள் தங்கள் உடல் மீதும் மனதின் மீதும் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று கூறி, என்னை தூய்மைப்படுத்தப் போவதாகக்கூறி என்னை அணைத்து முத்தமிட்டார்.
நான் அதைத் தடுத்தேன். ஆனால், அவர் என்னை விடாமல், அவரது உடல் பலத்தை பிரயோகித்து என்னை பாலியல் வன்புணர்ச்சி செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான், நான் உங்களைக் கடவுளைப்போல வழிபட்டு வந்தேன், என்னை சீரழித்து விட்டீர்களே என்று கதறினேன். அதற்கு பாபா, கடவுள் கிருஷ்ணாகூட இதேபோலத்தான் என்று பதில் அளித்தார்.
பின்னர் நான் என் உடைகளை மாட்டிக்கொண்டு அழுதுகொண்டே வெளியேறிவிட்டேன். இது நடைபெற்று ஒரு ஆண்டு கழித்து மீண்டும் பாபா என்னை அழைத்தார், நான் மறுத்துவிட்டேன்.
அதைத்தொடர்ந்து எனக்கு உணவு கொடுக்கப்படமாட்டாது என்று அவர் மிரட்டினார். அதனால் மீண்டும் அவரை பார்க்கச் சென்றேன் மீண்டும் கதவைச் சாத்திக்கொண்டு என்னை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முனைந்தார்.
அப்போது, நான், இதுபற்றி எனது சகோதரரிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லி மிரட்டினேன்.
ஆனால், பாபா அதற்கு, தன்னிடமும் ஏராளமான ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை வைத்து உன் சகோதரனைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். என்னை மீண்டும் பாலியல் வன்புணர்ச்சி செய்ததுடன், வெளியே சொன்னால் குடும்பத்தையே எரித்து விடுவேன் என்று எச்சரித்தார்.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு ஜுலை மாதம் 10 ம் தேதி என் அம்மா கொல்லப்பட்டார்.
அதைத்தெடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு நான் திருமணம் செய்து கொண்டேன். எனது தந்தையும், கணவரும் எனக்கு துணை நிற்க நான் நீதிக்காக போராட முடிவெடுத்து, பாபா மீது போலீசில் புகார் அளித்தேன்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட அந்த பெண் சன்னியாசி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இவரது வாக்குமூலத்தை தொடர்ந்தே சாமியாருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.