சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் திருநாங்கூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது.
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34வது திருத்தலம். திருவாலி அழகியசிங்கர் கோயில், திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. திவ்யபிரபந்தத்தில் பாடப்பெற்று உள்ள வயலாளி மணவாளன் இங்கு இல்லாமல்; திருநகரியில் இருப்பதால் இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலை கி பி 16ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது.
பத்ரீகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசித்ததால் இத்தலம் பத்ரிக்கு இணையானது இரண்யனை வதம் செய்த உக்கிரம் தனிய வர்களின்வேண்டுகோளுக்கு இணங்க லட்சுமிதாயார் பெருமாளின்வலதுதொடையில் அமர பெருமாள்தாயாரை ஆலிங்கனம் செய்து கோபம்தணிந்தார்.இத்தலத்தில் நரசிம்மர், திருமங்கை ஆழ்வாருக்கு காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. இதனருகில் காணப்படும் வேதராஜன் கோயிலுக்கும், இக்கோயிலுக்கும் மிகவும் தொடர்புள்ளது. திருநகரி வேதராஜன் கோயிலில் நடைபெறும் திருமங்கை ஆழ்வார் உற்சவம் போன்று இக்கோயிலும் ஆண்டு தோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் தை மாத பௌர்ணமி அன்று நடைபெறும் திருமங்கைஆழ்வார் மங்களசாசன உற்சவத்தின் போது இக்கோயில் உற்சவர் அழகியசிங்கர் கருட வாகனத்தில் புறப்படாகி திருமணிமாடக் கோயிலுக்குஎழுந்தருளகிறார். கருட சேவையின் போது திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்திலும், திருநகரி வேதராஜன் கோயிலிலிருந்து திருமங்கை ஆழ்வார் தமது இணையர் குமுதவல்லியுடன் அன்னப் பறவை வாகனத்திலும், 11 திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்கு எழுந்தளரும் போது , திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் பாடப்படுகிறது. பத்து நாள் நடைபெறும் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாந்த பவித்திர உற்சவம், பங்குனி உத்தரம் விழாக்கள் நடைபெறுகிறது.