அஜர்பைஜான் நாட்டு அதிபர் இல்ஹாம் அலியேவ் தனது மனைவி மெக்ரிபனுக்கு திருமண நாள் பரிசு ஒன்று வழங்கிள்ளார். ஆம், அவரது முதல் துணை அதிபராக மெக்ரிபனை நியமித்துள்ளார்.

சோவியத் குடியரசில் உள்ள அஜர்பைஜான் நாட்டின் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள 52 வயது மெக்ரிபன் அந்த பதவியில் சிறப்பாக செயல்படுவார் என்ற கருத்து உருவாகியுள்ளது. அதிபர் பதவியில் இருந்து அஜர்பைஜான் விலகினாலும் அவரது பணியை திறம் பட செய்து மெக்ரிபன் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

இவர் அமைச்சரவையும் கவனிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதோடு 19 வயதாகும் அலியேவா என்ற அதிபராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆண்டுகள் என்று இருந்த அதிபர் பதவியின் காலம் 2009ம் ஆண்டில் 7 ஆண்டுகளாக மாற்றி அமைத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் அதிபர் பதவிக்கான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவரான மெக்ரிபன் அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பணியாற்றிய இவர், யேனி ஆஜர்பைஜான் கட்சியில் கணவரின் பதவியிலும் அமர்ந்து வழிநடத்தி வருகிறார்.

இவரது நியமனத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘‘இந்த பதவி அவரது திறமையால் கிடைத்தது அல்லது. நாட்டு மக்களை அவமதிக்கும் செயல். நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர இது முதல் நடவடிக்கை’’ என்று விமர்சனம் செய்துள்ளன.

மெக்ரிபன் ஒரு ஆடம்பர பிரியர். சொகுசு வாழ்க்கைக்கு புகழ் பெற்றவர். சிகை அலங்காரம், பேசியல், அழகு ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.