டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள தேசிய நினைவுச்சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட நாளை முதல் 15ந்தேதி வரை இலவசம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துவருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.