
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார்.
இந்த ரீமேக்கில் கார்த்தி – பார்த்திபன் இருவரும் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தி குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில்
“இச்செய்தி நற்செய்தி ஆகலாம்! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனைத் தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே..”
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel